லோன் கட்டலன்னு உங்க போட்டோவ பிராட்னு டேக் பண்ணி உங்க பிரிண்ட்ஸ்,பேமிலி ,ரெளடிவ்ஸ் எல்லாருக்கு அனுப்புறாங்களா ?

நீ காச கட்டல உன்னோட போடவ பிராட்னு சொல்லி உன்னோட பிரிஎண்ட்ஸ் அண்ட் பேமிலிகு அனுப்புவ. இந்த மாரி உங்கள மெரட்டுனா கவலை படவேணாம். தைரியமா இருங்க! ரிகவரி ஏஜென்ட் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது சட்டவிரோதம்.

இது ஒரு கிரிமினல் குற்றம்

  • தனிநபர் புகைப்படத்தை திருத்தி பரப்புவது
  • “கடன் ஏமாற்றுபவர்” என்று பொய் குற்றச்சாட்டு சுமத்துவது
  • WhatsApp/Facebook-ல் பரப்புவது
  • உறவினர்களுக்கு அனுப்புவது

உடனடி நடவடிக்கைகள்:

  1. சமூக வலைதள பதிவுகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சேமிக்கவும்
  2. யார் யாருக்கெல்லாம் அனுப்பியுள்ளார்கள் என்பதற்கான ஆதாரம் சேகரிக்கவும்
  3. உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கவும்
  4. வங்கிக்கு எழுத்து மூலம் புகார் அளிக்கவும்

சட்டப்படி நீங்கள் பெறக்கூடிய நிவாரணம்:

  1. சைபர் கிரைம் பிரிவின் கீழ் வழக்கு
  2. தனிநபர் அவமதிப்பு வழக்கு
  3. நஷ்ட ஈடு கோரலாம்
  4. ரிகவரி ஏஜென்சியின் உரிமம் ரத்து

புகார் செய்ய:

  • சைபர் கிரைம் புகார்: www.cybercrime.gov.in
  • RBI புகார் எண்: 14448
  • காவல் நிலைய புகார்: 100

சட்டப்பிரிவுகள்:

  • ஐபிசி 499 (தனிநபர் அவதூறு)
  • ஐடி சட்டம் பிரிவு 66E (தனியுரிமை மீறல்)
  • ஐடி சட்டம் பிரிவு 67 (சைபர் புல்லிங்)

நினைவில் கொள்ளுங்கள்: இது ஒரு பெரிய குற்றம். உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கலாம். பயப்பட வேண்டாம், சட்டம் உங்கள் பக்கம் உள்ளது

Leave a Comment