கடனுக்காக ரிகவரி ஏஜென்ட் குடும்பத்தில் உள்ளவர்களை தொந்தரவு செய்யலாமா?

இருடா உன் பொண்டாட்டி வீட்லதான் இருக்கு நான் அவ கிட்ட காசு கேக்குற, இது மாரி நீங்க வாங்குன கடனுக்காக உங்க குடும்பத்தில இருக்கிற ஆட்கள் கிட்ட காசு கேட்டு மெரட்டுறாங்களா ?.உங்கள் கடனுக்காக உங்கள் குடும்ப உறுப்பினர்களை ரிகவரி ஏஜென்ட் தொந்தரவு செய்வது சட்டப்படி குற்றம். RBI விதிமுறைகளின்படி இது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

யாரை தொடர்பு கொள்ள கூடாது?

  • மனைவி/கணவர்
  • பெற்றோர்
  • குழந்தைகள்
  • உறவினர்கள்
  • அக்கம்பக்கத்தினர்
  • சக ஊழியர்கள்

என்னென்ன செய்ய கூடாது?

  1. குடும்ப உறுப்பினர்களை அழைத்தல்
  2. வீட்டிற்கு வந்து பேசுதல்
  3. குடும்பத்தினரிடம் கடன் பற்றி கேட்டல்
  4. பணம் கேட்டு மிரட்டுதல்
  5. அவமானப்படுத்துதல்

ரிகவரி ஏஜென்ட் மீறினால்:

  1. அழைப்புகளை பதிவு செய்யுங்கள்
  2. WhatsApp மெசேஜ்களை சேமியுங்கள்
  3. RBI-யில் புகார் செய்யுங்கள் (14448)
  4. காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள்
  5. வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு புகார் அனுப்புங்கள்

சட்டப்படி தண்டனை:

  • IPC பிரிவு 503 (குற்றவியல் மிரட்டல்)
  • IPC பிரிவு 506 (கொலை மிரட்டல்)
  • IPC பிரிவு 509 (பெண்களின் மானத்தை சீர்குலைத்தல்)

குடும்பத்தினருக்கான ஆலோசனை:

  1. தொல்லை வந்தால் உடனே தெரிவிக்கவும்
  2. பதிவு செய்யப்படாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம்
  3. எந்த தகவலும் பகிர வேண்டாம்
  4. மிரட்டல் இருந்தால் உடனே புகார் செய்யவும்

கடன் வாங்கியவருக்கு மட்டுமே பொறுப்பு:

  • கடன் ஒப்பந்தம் செய்தவர் மட்டுமே பொறுப்பு
  • குடும்ப உறுப்பினர்கள் கடன் கட்ட கடமைப்பட்டவர்கள் அல்ல
  • கூட்டு கடன் எடுத்திருந்தால் மட்டுமே இணை கடன்தாரர் பொறுப்பு

நினைவில் கொள்ளுங்கள்: குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்வது சட்டப்படி குற்றம். உடனடியாக புகார் செய்யுங்கள்.

தொடர்புக்கு:

  • RBI புகார் எண்: 14448
  • காவல் உதவி: 100

Leave a Comment